மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி போடிநாயக்கன் பட்டியில் உள்ள இறைவாக்கு இல்லத்தில் தலைவி லீட் பவுண்டேஷன் சார்பாக நாளைய பாதுகாப்பான சூழ்நிலைக்கு இளையோரை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பிற்கு தலைவர் ஷர்மிளா தலைமை தாங்கினார். இந்த பயிற்சி வகுப்பில்முதல் நாள் வளர்ச்சி ஆலோசகர் டாக்டர் ராஜேஸ்வரி, போஷ் சட்டம் 2013 விரிவாக விளக்கினார். அப்போது அவர் பேசியதாவது:- பெண்கள் தங்கள் பணியிடங்களில் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் பணிபுரியக்கூடிய சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது எனவும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு,பேச்சின் மூலமாகவோ அல்லது செயல்களின் மூலமாகவோ, பாலியல் நோக்கத்துடன் கூடிய வார்த்தைகள், கருத்துக்கள், கேலி, கிண்டல், ஆபாசமான படங்கள், வீடியோக்கள் அல்லது கருத்துக்கள் பகிர்வு போன்றவற்றால் ஏற்படும் பிரச்சினைகளில், பெண்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், எழுத்துப்பூர்வ புகார் அளிக்கும் நடைமுறை, தண்டனைகள் ஆகியவற்றை கூறினார்.
இரண்டாம் நாளில் முதுநிலை மேலாளர் சக்தி செல்வராஜ் போக்ஸோ சட்டம் 2012 குறித்து கூறினார். அவர் கூறும்போது :- இந்த சட்டத்தின் நோக்கம் 18 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் குற்றங்கள், தொல்லைகள், அச்சுறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள் ஆகியவற்றை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவும் உருவாக்கப்பட்ட தாகவும் விளக்கினார். மதுரை மற்றும் தேனி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன்பெண் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.மதுரை மற்றும் விருதுநகர் குழந்தைகள் நலக்குழு ஆலோசகர் பிரேமலதா குடும்ப பாதுகாப்பு, பராமரிப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு, பராமரிப்பு, வளர்ச்சி மற்றும் மறுவாழ்வு வழங்குவது பற்றியும் விரிவாக பேசினார்.
தலைவி லீட் பவுண்டேஷனின் கௌரவ ஆலோசகர் முருகப்பெரியார் அமைப்பின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். இறுதியாக, பெங்களூர் குவஸ் கார்ப் நிறுவன இது நிலை துணைத் தலைவர் டாக்டர் இஸ்ரேல் இன்பராஜ், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் இந்த சட்டங்கள் எவ்வாறு பயனுள்ளதாக உள்ளன என்பதைவிரிவாக விளக்கினார். இந்தபயிற்சி முகாமில் மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, கரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த முதுகலை சமூகப்பணி மாணவர்கள், தொழில் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய இளம் மனிதவள அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் பணி பெறக்கூடிய அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சியும் சான்றிதழும் பெற்றனர். முடிவில் செயலாளர் மாலா நன்றி தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி