திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், அந்தோணி ஜெகதா திருநெல்வேலி உடையார்பட்டி லட்சுமி மருத்துவமனையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். அவர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது எப்படி என்பது பற்றியும், பெண்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் பெண்கள் ஆபத்து காலங்களில் தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள காவலன் எஸ் ஓ எஸ் (காவல் உதவி) செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி விளக்கமளித்தார். பெண்கள் பிரச்சனை என்று வரும் பொழுது தயங்காமல் காவல் துறையில் புகார் அளிக்க முன் வரவேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்