மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. கே. அரவிந்த் , அறிவுறுத்தலின் பேரிலும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் முதல்வர் தென்றல் ஏற்பாடு செய்திருந்த , மதுரை மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான விழிப்புணர்வு பற்றியும் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் காவலன் ஆப் பற்றிய விழிப்புணர்வு பற்றியும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு மதுரை மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு பி. எஸ். ராமகிருஷ்ணன், துணைக் கண்காணிப்பாளர், சந்திரசேகரன் துணைக்
காவல் கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி ஆய்வாளர் மற்றும் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியோர்களால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி