திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., வழிகாட்டுதல்படி “தற்காப்பு கலை கற்பித்து பெண்களை காப்போம்” என்ற தலைப்பை உறுதிப்படுத்தும் வகையில் வள்ளியூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பிரசன்ன குமார், இ.கா.ப., முன்னிலையில் ஏர்வாடி காவல் ஆய்வாளர், சுதா தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தற்காப்பு கலை முகாம் ஏர்வாடி காவல் நிலையம் அருகே ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உணவு மற்றும் Tracksuit உடைகள் காவல்துறை சார்பில் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 25 நாட்கள் நடக்கும் இப்பயிற்சியில் 50 சிறுமிகள் மற்றும் இளம் பெண்களுக்கு சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இது போன்ற பயிற்சிகள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என்று காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்