திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் கண்காணிப்பாளராக உள்ள முருகன் என்பவர் பெட்ரோல் நிலையத்தில் வசூலாகிய ரூ.36 லட்சத்தை அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்துவதற்காக பைக்கில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 3 பேர் வழிமறித்து அவரை தாக்கிவிட்டு பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பித்து விட்டனர். இது குறித்த புகாரின்பேரில், பணகுடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து காவல்கிணறு ஸ்டேட் வங்கியின் வெளிப்பகுதி, முக்கிய சாலை சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்