தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதம்புதூர் பகுதியில் (26.01.2026) அன்று இரவு நேரத்தில் எம் சாண்ட் ஏற்றி வந்த லாரியின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் லாரி ஓட்டுநரான செங்கோட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தீக்காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S.மாதவன், உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மருதம் புதூர் பகுதியை சேர்ந்த சுடலை ஆண்டி என்பவரின் மகன் சாமி @ சக்தி @ சூத்த (வயது 21). மற்றும் ஆதி மூலம் என்பவரின் மகன் மாரியப்பன் (வயது 24). ஆகிய இரண்டு நபர்களையும் அதிரடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















