திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நாராயணசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவர் பாலமுருகன் (30). இவர் வீட்டின் மேல் கடந்த (12.012.2025) அன்று இரவு மர்ம நபா்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். இது குறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர், சுப்பிரமணியன் விசாரணை மேற்கொண்டார். இதில் பாலமுருகனின் தம்பி மதனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இருந்த முன் விரோதத்தினால் அந்த நபர்கள், மதுபோதையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசியதாக, அதே பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள், அம்பாசமுத்திரம் திலகர்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (20). ஆகிய 5 பேரை விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















