திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் பழநி, சாமிநாதபுரம் ஜி.வி.ஜி.,நகரில் கஞ்சா போதையில் தகராறு செய்ததால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த மூவரும் ராமாத்தாள்(55). என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர்.அதனை தொடர்ந்து உலகநாதன் என்பவரின் கார் கண்ணாடியை கல் வீசி உடைத்தனர். வயலூர் பகுதியில் இருந்த பேக்கரி கண்ணாடியை உடைத்து, அதே பகுதியில் சேர்ந்த சீனிவாசன் என்பவரை தாக்கி விட்டு தப்பி ஓடினர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் பழனி DSP. தனஞ்ஜெயன் மேற்பார்வையில் சாமிநாதபுரம் சார்பு ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஜிவிஜி நகரை சேர்ந்த கண்ணன் மகன் ஹரிமணி(19). மதுரையை சேர்ந்த தண்ணிபழம் மகன் கௌதம்(19). முத்துப்பாண்டி மகன் முத்துக்குமார்(19). ஆகிய 3பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















