திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த முருகாண்டி மகன் கந்தசாமி என்ற கண்ணபிரான்(46). இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவராக உள்ளார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் தொடர்ந்து பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருநெல்வேலி மாநகர துணை ஆணையர், வி.பிரசன்னகுமார், (மேற்கு) காவல் உதவி ஆணையர், சரவணன் (சந்திப்பு சரகம்) காவல் ஆய்வாளர், தில்லை நாகராஜன் (தச்சநல்லூர் சட்டம் ஒழுங்கு) ஆகியோர் மாநகர காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தனர். அதன் பேரில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா. ப., உத்தரவுப்படி, கண்ணபிரான் கடலூர் மத்திய சிறையில் (22.11.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















