திண்டுக்கல் : திண்டுக்கல்லுக்கு பெங்களூருவில் இருந்து ஈச்சர் லாரியில் குட்கா கடத்தி வருவதாக S.P பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்பி தனிப்படையினர் சிறுநாயக்கன்பட்டி அருகே கரட்டழகன்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த ஈச்சர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது. இதனை அடுத்து ஈச்சர் லாரியை ஓட்டி வந்த மதியழகன்(32), அப்பாஸ்(32) ஆகிய 2 பேரை கைது செய்து, 850 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து அம்பாத்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அம்பாத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.