கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்துள்ள கோனேரிப்பள்ளி பகுதியில் இன்று (டிசம்பர் 16) அதிகாலை முனியப்பன் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 6 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து முனியப்பன் அளித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்