திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலகுண்டு மேலமந்தை தெருவை சேர்ந்த சேக் அப்துல்லா திண்டுக்கல் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து தங்க நகைகளை திருடி சென்றனர். இதனைத் தொடர்ந்து அவர் வீட்டின் அருகே இருந்த கோவில் பூசாரி தங்கமுத்து என்பவர் வீட்டின் மாடி வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அவர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ரூ.20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்த 2 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்து இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா