திண்டுக்கல் : திண்டுக்கல், சாணார்பட்டியில் பத்திரபதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மர்ம நபர்கள் நள்ளிரவு பத்திரபதிவு அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு டேபிளில் இருந்த ஆவணங்களையும் புரட்டி பார்த்துவிட்டு சென்றுள்ளனர். மேலும் அலுவலகத்தில் இருந்த எந்த பொருளும் திருடும் போகவில்லை. இதனால் மர்ம நபர்கள் பணம் திருடுவதற்காக உள்ளே சென்றனரா? இல்லை ஆவணங்களை திருட வந்தனரா? என சாணார்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா