சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், திருக்கோஷ்டியூர் காவல்நிலைய சரகம் கருங்குளம் கிராமத்தைச்சேர்ந்த பெரிய நாச்சியப்பன் மகள் நாச்சியப்பன் (70). மற்றும் அண்ணாமலை மகன் வயிரவன் (74). ஆகியோர் தற்பொழுது சென்னையில் வசித்து வரும் நிலையில், இவர்களுக்கு கருங்குளம் கிராமத்தில் இவர்களுக்கு பூர்விக வீடுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த (22.02.2025) ம் தேதி இரவு மர்ம நபர்கள் மேற்படி நாச்சியப்பன் மற்றும் வயிரவன் ஆகியோரது வீடுகளின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த வெள்ளி மற்றும் காமாட்சி விளக்கு உள்ளிட்டவைகளை திருடி சென்றனர். இது தொடர்பாக, திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகளை பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது உத்தரவின் பேரில், காவல் துணைக்கண்காணிப்பாளர், திருப்பந்தூர் உட்கோட்டம் அவர்களது அறிவுறுத்தலின் பேரிலும், காவல் ஆய்வாளர் திருக்கோஷ்டியூர் காவல் நிலையம் அவர்களது தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட செபஸ்டியான் மகன் சார்லஸ் என்ற சேசு அருள் (36). திருப்புவனம் அகரம் சிலைமான் பகுதியை சேர்ந்த வீரணன் என்பவரின் மகன் கார்த்தி (எ) கார்த்திகேயன் (36). நாமக்கல் மாவட்டம் ரெட்டிரோடு பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் மகன் மாதேஸ்வரன் (37). ஆகிய 3 பேரை தனிப்படையினர் பிடித்து விசாரித்ததில் கருங்குளத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்பு கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, வழக்கின் குற்றவாளிகளான மூவரிடமிருந்தும் திருடு போன களவு சொத்துக்களான 3.717 கிலோ அளவிலான வெள்ளி பொருட்கள் மற்றும் குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், ஆயுதம் போன்றவை கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், இ.கா.ப அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி