திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியில் அமைந்துள்ள கே.ஜி.என் செல்போன் கடை பிரபலமான கடையாகும். முகமது அல்தாப் என்பவருக்கு சொந்தமான கடையினை இரவு பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் கே.ஜி.என் கடை உள்ள தெருவில் இரவு மர்ம நபர்கள் கடப்பாரையை கொண்டு பூட்டுகளை நீக்கி உடைத்து கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் கடையில் இருந்த 1.50 லட்சம் மதிப்பிலான செல்போன்களையும் 47 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
இன்று காலையில் வழக்கம் போல் கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும் அதில் உள்ள பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து முகமது அல்தாப் இது குறித்து மீஞ்சூர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு