திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை, தென்மலையில் உள்ள ஒரு எஸ்டேட்டுக்கு தோட்டவேலைக்கு வந்த ராஜபாளையத்தை சேர்ந்த ராஜா மகன் முருகன்(36). என்பவர் மன உளைச்சல் காரணமாக பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தாலுகாவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா