தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு. அமல்ராஜ் அவர்கள், உத்தரவின்படி பல தனி படைகள் அமைக்கப்பட்டு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் நபர்கள் சம்பந்தமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் (11/4/2023), ஆம் தேதி காலை 9:30 மணிக்கு டி – 18 தாழம்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பாரதி மற்றும் பார்ட்டி சாகிதமாக தாழம்பூர் மேடவாக்கம் சாலை சந்திப்பில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது பொன்மார் பக்கம் இருந்து தாழம்பூர் மார்க்கமாக வேகமாக வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்த முயன்ற போது நிறுத்தாமல் செல்ல முயன்ற ஆட்டோவை விரட்டிச் சென்று பார்ட்டி சகிதமாக மடக்கிப் பிடித்து விசாரணை செய்துள்ளார்கள் விசாரணையில் ஆட்டோவில் வந்த நான்கு நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் ஏற்பட்ட ஆட்டோவை சோதனை செய்ய டேஷ் போர்டில் 10, 500 ரூபாய் நோட்டுகளும் ஆட்டோவில் இருந்தவர்களை சோதனை செய்ததில் புதிய 500 ரூபாய் நோட்டுகளும் வைத்திருந்தவர்களை விசாரணை செய்ய பணத்தை பற்றி மாற்றி மாற்றி கூறி கடைசியாக அவர்கள் வைத்திருக்கும் ரூபாய் ஓட்டுகள் அனைத்தும் கள்ள ரூபாய் நோட்டுகள் என்று ஒப்புக் கொண்டார்கள்.
கள்ள ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த குற்றத்திற்காக லோகநாதன் (48) பெரும்பாக்கம், எபினேசர் (44), உத்தாண்டி சென்னை, ஜெயகாந்த் (47), திம்மாவரம் செங்கல்பட்டு பிரசாந்த் குமார் (34) ஆகிய நால்வரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 77 புதிய 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணையில் அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் கள்ள ரூபாய் நோட்டுகளை தயார் செய்தும் நல்ல நோட்டுகளாக மாற்றும் மற்ற குற்றவாளிகள் ஆன எட்வர்ட் ஆரோக்கிய ஜெனரல் (28) உளுந்தூர்பேட்டை தாலுகா கள்ளக்குறிச்சி மாவட்டம், சரவணன் (41) வில்லிவாக்கம்,பிரவீன் குமார் (33) ஸ்ரீரங்கம் திருச்சி, செந்தில் (40) புத்தூர் திருச்சி ஆகிய நால்வரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 400 கள்ள ஐநூறு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்தும் காகிதம் ஆயிரம் டெல் லேப்டாப் மற்றும் cannon பிரிண்டர் மிஷின் ஆகியவைகள் அனைத்தும் திருச்சியில் இருந்து கைப்பற்றப்பட்டது குற்றவாளிகள் மீது டி-18 தாழம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்