திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சத்யாநகர் பகுதியில் கருணாகரன் என்பவர் புல்லட் திருடு போனது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் டிஎஸ்பி.சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர்கள் முனியாண்டி, சூரியகலா மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் மருதாணி குளம் பகுதியை சேர்ந்த நாராயணசாமி மகன் வெங்கடாசலபதி(45). வேடசந்தூர், ஒத்தப்பட்டியை சேர்ந்த வேல்முருகன் மகன் நவீன்குமார்(25). ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2புல்லட்கள் பறிமுதல் செய்து 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா