திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குருவி மேடு பகுதியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக ரிலையன்ஸ் தொழில் நிறுவன சென்னை நிலைய வளாகத்தில் புறவளாக அவசரகால ஒத்திகை நடைபெற்றது. காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எண்ணூர் காமராஜ் துறைமுகம் மற்றும் பிற துறைமுகங்களில் இருந்து கப்பல் மூலம் பைப்லைன் வழியாக அனுப்பப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் சேகரிக்கப்படும் டேங்குகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து தத்துரூபமாக ஒத்திகை நடைபெற்றது. டேங்குகளில் ஏற்படும் திடீர் தீ விபத்து அதை உடனடியாக தானியங்கி தீயணைப்பான் மூலம் எவ்வாறு அணைப்பது சுமார் எட்டு பத்துக்கும் மேற்பட்ட டீசல் மற்றும் பெட்ரோல் சேமிக்கும் தேக்க தொட்டிகளில் தீ பரவாமல் எப்படி தடுப்பது என்பது குறித்து ஒத்திகையில் விளக்கமாக செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி உடனடியாக அவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிப்பது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது உள்ளிட்ட செய்முறை விளக்கங்கள் நடைபெற்றது.
இந்த அவசர கால ஒத்திகையில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கெத் பல்வந்த் கலந்து கொண்டு நேரில் பார்வையிட்டார். மாவட்ட தொழில் பாதுகாப்பு மற்றும் நலன் துறை அதிகாரிகள், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிகள் மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் மகேந்திரவர்மன், ஒன்றிய குழு உறுப்பினர் கொண்டக்கரை ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு