திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ராணி மேல்நிலைப்பள்ளி அருகே புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., (11.01.2025) அன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பொது மக்களின் பாதுகாப்பு கருதியும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் தற்போது இப்பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்து கொள்ளலாம் எனவும், இந்த புறக்காவல் நிலையம் 24 மணிநேரமும் செயல்படக்கூடியது என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், அம்பாசமுத்திரம் காவல் நிலைய ஆய்வாளர், ரமேஷ் கண்ணன் உதவி ஆய்வாளர்கள், மேதாஜி சிதம்பரம், ஆனந்த பாலசுப்பிரமணியன், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்