திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலை கிராமமான பூம்பாறையில் புதிய புற காவல் நிலையத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பிரதீப் IPS திறந்து வைத்தார். மேலும் மலைசாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்து வந்த நிலையில் மேல் மலை கிராமங்களுக்கு என தனியாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில் இன்று பூம்பாறை கிராமம் பிரதான சாலையில் புற காவல் நிலையம் தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர். நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேற்றபட்டது. குறிப்பாக இந்த காவல் நிலையத்தில் ஒரு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர் இங்கு இருப்பதாகவும், கிராமமக்கள் அளிக்கும் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆண்டு மட்டும் திண்டுக்கல் மாவட்ட அளவில் கஞ்சா, காளான் குறித்த 311 வழக்குகள் பதிய பட்டுள்ளதகாகவும், இது 2023 ஆண்டை விட அதிகமானது என்றும், குறைந்த அளவில் கஞ்சா வைத்திருந்தாலும் அவர்களுக்கு பெயில் கிடைக்காத அளவில் வழக்கு பதியபடும் எனவும், அதே போல போதை காளான் வைத்திருந்தால் குண்டர் சட்டம் பாயும் எனவும், கஞ்சா வழக்கில் கைதானவர்களிடம் கஞ்சா எங்கு கிடைத்தது, யார் மூலம் கிடைத்தது, என்ற கோணத்தில் அவர்களை தொடர்ந்து கண்காணித்து, தீவிர விசாரணை செய்தும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு மையத்தில் வைத்து அவர்களை போதை பழக்கங்களில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் காவல் துணை கண்காணிப்பாளர் DSP.மதுமதி, காவல் ஆய்வாளர்பாஸ்கரன், காவலர்கள் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா