மதுரை: புனித வியாழன் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள். தவக்காலத்தை கடைப்பிடித்து வரும் கிறிஸ்தவர்களின் புனித வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக புனித வியாழன் தினமான நேற்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முதல் நாள் தன்னுடைய சீடர்கள் 12 நபர்களின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்வினை நினைவு கூறும் வகையில் அனைத்து ஆலயங்களிலும் தேர்வு செய்யப்பட்ட 12 நபர்களின் பாதங்களை பங்கு தந்தையர்கள் மற்றும் போதகர்கள் கழுவி முத்தமிடும் நிகழ்வு நடைபெற்றது. மதுரையில் ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை மதியழகன், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ், அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அருள் சேகர், டவுன் ஹால் ரோடு புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அமல்ராஜ் மற்றும் கீழவாசல் தூய மரியன்னை பேராலயம், புதூர் லூர்து அன்னை ஆலயம், இரயில்வே காலனி திரு இருதய ஆண்டவர் ஆலயம், டவுன்ஹால் ரோடு புனித ஜெபமாலை அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் மற்றும் சிஎஸ்ஐ தேவாலயங்களிலும் பாதிரியார்கள் மற்றும் போதகர்கள் தேர்வு செய்யப்பட்ட 12 நபர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் வியாழன் இரவு நள்ளிரவு 12 மணி வரையிலும் மீண்டும்’ புனித வெள்ளியை முன்னிட்டு காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் அமைதியான முறையில் ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து 3 மணிக்கு சிலுவைப்பாதை ஜெப வழிபாடு அதனை தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று அதோடு ஆலயங்கள் மூடப்படும். (ஆலயத்தில் உள்ள இயேசு சிலுவையில் அறையப்பட்ட பாடுபட்ட சுபரூபம் வெண் துணியால் மூடப்படும்) சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஈஸ்டர் சிறப்பு வழிபாடுகள் நடக்கும் நடைபெறும்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

ஆண்டனி வினோத்