திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக ஆங்கில புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடம் பொது இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதிகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் திருநெல்வேலி மாநகர காவல்துறையினரால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநகரின் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் 9 ஆயுதம் ஏந்திய இருசக்கர வாகனங்கள் மற்றும் 9 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக 12 இருசக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட்டாசு மற்றும் வான வேடிக்கைகளை வெடிப்பவர்கள், மது போதையில் பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் வாகன பந்தயங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க மாநகரின் முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனையும் மேற்கொள்ள சுமார் 450 காவலர்கள் பணிக்கு நியமிக்கபட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















