சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் பகுதியில் புத்தாண்டு தினத்தையொட்டி இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு செல்கிறார்களா பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபடுகிறார்களா என தேவகோட்டை உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய பார்த்திபன் தலைமையில் திருப்பத்தூர் சாலையில் உள்ள தனியார் பேக்கரி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இரவு 12 மணி ஆனதும் அவ்வழியாக செல்லும் ஆட்டோ கார் இருசக்கர வாகனங்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் கேக் வெட்டி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நகர் காவல் ஆய்வாளர் மரியாதைக்குரிய அந்தோணி செல்லத்துரை, சார்பு ஆய்வாளர்கள் மரியாதைக்குரிய அன்சாரி உசேன் , மரியாதைக்குரிய மலைச்சாமி, மரியாதைக்குரிய பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான காவலர்கள் ஆளுநர்கள் கலந்து கொண்டு புதிய 2024 ஆம் ஆண்டு வரவேற்று ஒருவர் ஒருவர் வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
காவல் துறையினர் வாகன ஓட்டிகளை வழிமறித்து கேக் வழங்கியது வாகன ஓட்டிகள் வாழ்த்து சொல்லி நன்றி தெரிவித்து பாராட்டினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
