கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 02.01.2020. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வாகனங்களில் அதி வேகமாக ஓட்டுதல், குடிபோதையில் ஓட்டுதல், பைக் ரேஸ், இவற்றில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N. ஸ்ரீநாத் IPS அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில் அதி வேகமாக ஓட்டியவர்கள், குடிபோதையில் ஓட்டியவர்கள், மேம்பாலத்தில் பைக் ரேஸ் நடத்தியவர்கள், விதிகளை மீறி ஓட்டியவர்கள் என 20 வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். பின்பு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டம் 02.01.2020. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வாகனங்களில் அதி வேகமாக ஓட்டுதல், குடிபோதையில் ஓட்டுதல், பைக் ரேஸ், இவற்றில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N. ஸ்ரீநாத் IPS அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் அதி வேகமாக ஓட்டியவர்கள், குடிபோதையில் ஓட்டியவர்கள், மேம்பாலத்தில் பைக் ரேஸ் நடத்தியவர்கள், விதிகளை மீறி ஓட்டியவர்கள் என 20 வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். பின்பு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.