திருவாரூர் : புதூர் கிராமத்தை சேர்ந்த கவிப்பிரியா, செங்கல்பட்டு அரசு, சட்ட கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் இருந்த விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் 28- தேதி, கவிப்பிரியா, தன்னை சக மாணவிகள் கிண்டல் செய்வதாக, தனது தந்தைக்கு செல்போனில் , தெரிவித்து விட்டு மின் விசிறியில் துப்பட்டாவால், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. கவிப்பிரியா, தந்தை சிவப்பிரகாசம், அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு, தாலுகா காவலர் விசாரணை நடத்தி வந்தனர்.
கவிப்பிரியா, மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் , கிண்டல் செய்த மாணவிகளை விசாரித்து உரிய தண்டனை வழங்க வேண்டும், என்று கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். இதுகுறித்து பா.ம.க இளைஞரணி தலைவர், திரு.அன்புமணி ராமதாஸ், அறிக்கை வெளியிட்டார் அதில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு , ஒரு கோடி இழப்பீடும் தற்கொலைக்கு காரணமானவர்களை , கைது செய்ய வேண்டும், என குறிப்பிட்டிருந்தார்.
செங்கல்பட்டு நிர்வாகம் சார்பில், வருவாய் அலுவலர், காவல்துறை அதிகாரிகள் முன்னாள் எம்.எல்.ஏவும் பா.ம.க, மாநில துணைப் பொதுச் செயலாளருமான திருக்கச்சூர் , திரு.ஆறுமுகம், வக்கீல் சங்கரபாண்டி, கவிப்பிரியா, தந்தை ஆகியோர் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மூலம், அரசு தலைமையிடம் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, உறுதியளித்தனர். இந்த சம்பவத்தில் விசாரணை மேற்கொள்ள அரசு சட்டக் கல்லூரி, முதல்வர் திருமதி. கௌரிரமேஷ், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணையை மேற்கொண்டு, காவலரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.