தேனி: கம்பத்தில் இன்று திருமணங்கள் நடந்தன. இதனை அடுத்து கம்பம் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சிலைமணி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தம்பதி இருவர் திருமணத்தை முடித்து விட்டு எதிரில் உள்ள சாலையில் நடந்து வந்தனர்.
அப்போது அந்த வழியே வந்த வந்த வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி, தற்போது கொரானா காலம் என்பதால் கட்டாயமாக மாஸ்க் அணிந்து வெளியே வர வேண்டுமென்றும், மாஸ்க் கட்டாயம் அணிந்துதான் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி வைத்திருந்த இரண்டு மாஸ்க்குகளை மணமக்களிடம், கொடுத்து வாழ்த்தி வழியனுப்பினார்.