திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்ற மாற்று சமரச மையத்தின் உத்தரவின் மாற்று சமரச தினத்தை முன்னிட்டு படி வளாகத்தில் பதிய சமரச தீர்வு தினத்தை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் சமரசம் பற்றிய விழிப்புணர்வு அரங்கினை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், முதன்மை மாவட்ட நீதிபதி.முத்து சாரதா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் சமரச மையத்தில் வழக்காடிகள் தாங்கள் எதிர்தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை மூலம் தங்கள் வழக்குகளை தீர்வு காணவும் சமரசத்தில் வழக்குகளில் எவ்வித மேல்முறையீடு இல்லாமலும், விரைவாகவும் கட்டணமின்றி தீர்வு காணலாம்.
சமரசம் பற்றிய விவரங்களை கூடுதல் மாவட்ட நீதிபதி. மேஹபூப் அலிகான் ,விரைவு மகிளா நீதிபதி.சரண் ,தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்.மோகனா.முதன்மை சார்பு நீதிபதி.இராமசந்திரன் . மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாய சார்பு நீதிபதி. சாமுண்டீஸ்வரிபிரபா. கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி. ரெங்கராஜ். குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் நீதிபதி.பிரியா 1ல், நடுவர். செளமியா மேத்யூ 2ல். கூடுதல் மகிளா நீதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மாற்று சமரச மையத்தில் சமரசங்கள், வழக்கறிஞர்கள், நீதி துறை ஊழியர்கள் மற்றும் நீதி மன்ற ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளரும் கூடுதல் சார்பு நீதிபதி.தீபா தொகுத்து வழங்கி நன்றி கூறினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா