திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பழனி நகர் முழுவதும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 290 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கும் புதிய காவல் கட்டுப்பாட்டு அறை நகர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா