கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர மற்றும் ஓசூர் புறநகர் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகளும், பிற மாவட்டத்தவர் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் இருப்பதும், மாநில எல்லை என்பதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கு போதுமான காவல்துறையினர் இல்லாததே காரணம் என கூறப்படும் நிலையில் ஓசூர் அட்கோ, சிப்காட், பாகலூர் ஆகிய மூன்று காவல்நிலைய எல்லை பகுதிகளிலிருந்து 9 வருவாய் ஊராட்சிகள், ஒரு மாநகர வார்டு பிரிக்கப்பட்டு நல்லூர் என்னும் கிராமத்தில் புதிய காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய காவல்நிலையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்த நிலையில் ஓசூர் மாநகர ஆணையாளர் சினேகா மாவட்ட கூடுதல் எஸ்பி சங்கு, ஒசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்