செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்தூர் ஊராட்சியில் புவனேஸ்வரி நகரில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் கீழ்14 லட்ச ரூபாய் மதிப்பீட்டின் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆப்பூர் சந்தானம் அவர்கள் தலைமையில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறக்கப்பட்டது.
இதில் ஆத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ஷீலா தணிகாசலம் ஊராட்சி மன்ற தலைவர் கௌதம் துணைத் தலைவர் இந்து குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் ஒரு பகுதியாக அங்குள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் இனிப்புகளை வழங்கினார். காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் ஏழை எளிய குழந்தைகளை தூக்கி அன்பாக இனிப்பு வழங்கி மகிழ்ந்து குழந்தைகளோடு குழந்தை போல விளையாடி மகிழ்ந்தார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்