திருநெல்வேலி : (29.09.2024) அன்று உணவு பாதுகாப்பு துறையின், நியமன அலுவலர் மரு. இரா.சசி தீபா M.B.B.S., திருநெல்வேலி மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர், வ.மு.கிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவசுப்பிரமணியன், அருண் வெங்கடேஷ் மற்றும் திருநெல்வேலி டவுன் காவல் நிலைய ஆய்வாளர், கோபாலகிருஷ்ணன், துணை ஆய்வாளர், ஹரி மற்றும் காவலர்கள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என டவுன் பகுதியில் உள்ள கடைகளில் நடத்திய சோதனையில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு உணவு பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் கடை சீல் வைக்கப்பட்டு, ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்