திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம். பாளையங்கோட்டை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி, தலைமையில் காவல்துறையினர் (23-10-2024) ஆம் தேதி ரஹ்மத் நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்ததில் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, கூல் லிப், பான் மசாலா அடங்கிய 28 மூட்டைகளை கடத்தி வந்து பாளையங்கோட்டை பகுதிகளில் விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வாகனத்தில் வந்த தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி மகன் மாணிக்கராஜா மற்றும் ஒட்டநத்தத்தை சேர்ந்த பெருமாள் மகன் கலையரசன்(32). ஆகியோர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனத்தையும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். இது போன்ற அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ்குமார் மீனா, இ.கா.ப, எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்