திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், அருணாசலம் தலைமையிலான காவலர்கள் சாந்தி நகர் பகுதியில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த காரில் சுமார் 24 கிலோ எடைகொண்ட புகையிலைப் பொருள்களை மூட்டைகளில் மறைத்து வைத்திருந்தது கண்டறிந்து காருடன் அவற்றை பறிமுதல் செய்து, காரில் இருந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த மணிமாறன் மகன் ஜவஹா் (25). பாளையங்கோட்டை திம்மராஜபுரம் மோகன் மகன் தங்கசாமி (30). மாரியப்பன் மகன் கொம்பையா (36). புதுபேட்டை சண்முகையா மகன் முத்தார செல்வன் (24). ஆகியோரை கைது செய்தனர்.
இதே போல் முன்னீர்பள்ளம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், குமாரசாமி தலைமையிலான காவலர்கள் ஆரைக்குளம் வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அவர், கோபாலசமுத்திரம் செங்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் முத்துக்குமார்(24). என்பதும் விற்பனைக்காக சுமார் 40 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்ததையடுத்து அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















