திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த மையலப்புரத்தை காரல் மார்க்ஸ்(58). மற்றும் ஜீவானந்தம்(49). ஆகிய இருவரையும் சோதனை செய்ததில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து சுமார் 5 1/2 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















