திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த கருப்பனூத்து, நடுத் தெருவை சேர்ந்த செளந்தராஜ் (44). மற்றும் கடங்கனேரியை சேர்ந்த பெருமாள் (52). ஆகியோரை சோதனை செய்த போது 7 கிலோ 350 கிராம் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்ததால் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்