திருநெல்வேலி : திருநெல்வேலி சீதபற்பநல்லூர் பகுதியில் சீதபற்பநல்லூர் காவல் ஆய்வாளர், சுப்புலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது புதூர் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் (60). என்பவரை சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்ததையடுத்து காவல் ஆய்வாளர், பால்ராஜை (22.10.2024) அன்று கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ 925 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்