தேனி: தேனி மாவட்டம் கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரியப்பன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சாக்குப் பையுடன் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்க்கொண்டனர்.
விசாரணையில் கம்பம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த பிச்சையத்தா 56, கூடலூர் கன்னி காளிபுரத்தைச் சேர்ந்த சுதாகர் 47 என்பதும் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. புகையிலைகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து பிச்சையத்தா, சுதாகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலையின் மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 16 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.