தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நாசரேத் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சுந்தரம் மற்றும் போலீசார் (04.12.2025) நாசரேத் வெள்ளமடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் சாத்தான்குளம் தெர்க்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பச்சைமால் (27). என்பதும் அவர் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் வைத்திருந்ததும் தெரியவந்நது. உடனடியாக மேற்படி போலீசார் குற்றவாளி பச்சைமால் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மொத்தம் 275 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















