திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது AMC ரோடு பகுதியில் கடையில் வைத்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த திண்டுக்கல், வேடப்பட்டி பகுதியை சேர்ந்த லோகநாதன்(38). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா