அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பதை தடுக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவிட்டார். செந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.தன்ராஜ் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நந்தகுமார் 35. செல்வம் 39. ஆகிய 2 பேரையும் கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.