திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பழனி பேருந்து நிற்கும் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் வைத்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மேட்டுப்பட்டியை சேர்ந்த யாழரசன்(30). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 240 பாக்கெட்கள் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















