கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் To AVS Layout ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்திய போது காரில் இருந்து இரண்டு குற்றவாளிகள் இருவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்கள், நிறுத்தியிருந்த வாகனத்தை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹3,92,784/- ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது.வாகனத்துடன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்