விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் திரு.ராஜபாண்டி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இருக்கன்குடி மேற்கு பகுதியில் காந்தி (57), என்பவர் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது. போலீசார்அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.