கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஜிட்டோனப்பள்ளி கிராமத்தில் உள்ள பெட்டிகடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது பெட்டிகடையில் இருந்த நபர் போலீசாரை பார்த்து ஓடிவிட்டதாகவும் பெட்டிக்கடையை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹1,30,200/- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
















