புதுக்கோட்டை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.அருண்ராஜா தலைமையிலான போலீசார் நேற்று வள்ளியூர் பஜார் பகுதிகளில் சோதனை நடத்தினர்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வள்ளியூர் சேர்ந்த இசக்கியப்பன் (வயது 53), ராஜம்(62), கண்ணநல்லூரை சேர்ந்த ஜெயராஜ் (43), சார்லஸ் (54) ஆகியோரது கடைகளில் இருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனையின் மூலம்கிடைத்த ரூ.5 ஆயிரத்து 600-யும் பறிமுதல் செய்தனர்.