கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் சிப்காட் ஜங்ஷன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு (மார்ச் 12) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூர் நோக்கி வந்த ஒரு ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பயணிகள் 2 பேர் வைத்திருந்த பையில் 17 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ரவணசமுத்திரம் ஆஜி இப்ராஹிம் (29). இஸ்மாயில் (46). என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரக்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்