திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் உதவி ஆய்வாளர், சகாய ராபின் ஷாலு தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, தெற்கு கள்ளி குளத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ரமேஷ் (40). என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை செய்து பார்த்த போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து வள்ளியூர் காவல் ஆய்வாளர், பச்சைமால் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்து அவரிடமிருந்து 3 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்