திருநெல்வேலி : திருநெல்வேலி பத்தமடை, பகுதியில் உதவி ஆய்வாளர், செய்யது நிசார் அகமது தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பத்தமடை பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முருகன் (36). என்பவரை சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 1 கிலோ 125 கிராம் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்ததால் உதவி ஆய்வாளர் முருகனை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 125 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்