திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் , சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தேவர்குளத்திலிருந்து கழுகுமலை செல்லும் ரோட்டில் உள்ள குவாச்சிபட்டி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த கயத்தாறு, வடக்கு இலந்தகுளம், முத்து நகரை சேர்ந்த முனியசாமி (57). வெள்ளப்பனேரி, நடுத் தெருவை சுமன் (29). கயத்தாறு, இளவேலங்கால், நடுத் தெருவை சேர்ந்த அன்பரசு (32). ஆகிய மூவரையும் சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 07 கிலோ 185 கிராம் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. சிறப்பு உதவி ஆய்வாளர் குற்றவாளிகளை தேவர்குளம் காவல் நிலையம் அழைத்து வந்தார். இது குறித்து உதவி ஆய்வாளர், கணேசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முனியசாமி, சுமன், அன்பரசு ஆகிய மூவரையும் இன்று கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 07 கிலோ 185 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்